2012-13 ம் ஆண்டின் புதிய தலைவர் மற்றும் செயலர்களுக்கான பயிலரங்கம். மண்டலம் 13, 15. ன் உதவி ஆளுனர்கள் RtnRtn. P.T.S. நாராயணன், Rtn. SP. சுப்பரமணியன் அவர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.
Rtn. AG.SP. சுப்பரமணியன் வரவேற்புரை நிகழ்த்தி துவக்கி வைக்க, Rtn Rtn. P.T.S. நாராயணன் எதற்க்காக இந்த பயிலரங்கம் என்று விளக்கினார்.
அதன் பின் Rtn.DGN. R. விஸ்வேஷ்வரன் அவர்கள் ரோட்டரி அறக்க்கட்டளை பற்றி அருமையாக உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து பல்வேறு ரோட்டரி நண்பர்கள் ஒவ்வொரு தலைப்பிலும் தங்களுக்கே உரித்தான பாணியில் அருமையாக உரை நிகழ்த்தினார்கள்.
Rtn.A.அன்பரசு, நெய்வேலி - சங்க நிர்வாகம்,
Rtn.B.செல்வன், நெய்வேலி – சேவைத்திட்டங்கள்,
Rtn.R.வெங்கடேசன், விருத்தாசலம் – சங்க கூட்டம்,
Rtn.AG. M.ரமேஷ் சந்த், விருத்தாசலம் – த்லமைப் பண்புகள்,
Rtn.AG.S..நடராஜன், கடலூர் – நேர நிர்வாகம்.
முடிவில் மண்டல செயலர் RtnRtn. குருசாமி அவர்கள் நன்றி பாராட்டி நிறைவு செய்தார்கள். நல்ல அரங்கம், சிறப்பான ஏற்பாடு, இனிய உபசரிப்பு, நினைவுப் பரிசுகள், மிக ஆர்வமுடன் பங்கு கொண்ட சங்க பொறுப்பாளர்கள் என இந்த நிகழ்ச்சி எல்லோரும் பாராட்டும்படி அருமையாக இருந்தது.
பயிலரங்கம். மண்டலம் 13, 15
நல்ல துவக்கம். உதவி ஆளுனர்கள், தலைவர்கள் மற்றும் செயலர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி ஆண்டாக அமையட்டும்.